Thursday, January 19, 2017

கோடான_கோடி_நன்றி_பீட்டா

Tags

என் அன்பு முகநூல் சொந்தங்களே....இது என் முதல் முயற்சி...கொஞ்சம் நேரம் செலவிட்டு படியுங்கள்...எனது இந்த படைப்பில் குறை இருந்தால்
அது என்னை சேரும்...நிறைகள் என்றும் இறைவனை சேர்ந்தது....
                     
                          #கோடான_கோடி_நன்றி_பீட்டா

மாட்டுப்பொங்கல் அதுவுமா ஜல்லிக்கட்டு பத்தி நாட்ல இவ்வளவு பிரச்சனை நடக்குற இந்த நேரத்துல இப்படி ஒரு தலைப்புல எழுதுறானே அப்படினு சில பேர் என்னை வசவு சொல்லால அர்ச்சனை செய்வீங்க னு எனக்கு நல்ல தெரியும்.

நான் இந்த தலைப்பு வைக்க காரணம் இருக்கு...அதாவது நாம நேசிச்ச ஒரு விஷயத்த வெறுக்க வெச்சவங்களுக்கு கூட எதுவும் சொல்ல மாட்டோம். ஆனா நாம அடியோட வெறுத்த விஷயத்த அதி தீவிரமா நேசிக்க வச்ச ஒருத்தங்களுக்கு நன்றி சொல்லாம இருக்கிறது தமிழனா பொறந்த நமக்கு அழகில்லை.

ஒரு மூணு வருஷம் முன்னாடி வரை ஜல்லிக்கட்ட பத்தி என்னோட பார்வை இது தான் "ஜல்லிக்கட்டு ஒரு காட்டுப் பயலுக விளையாட்டு, இரக்கமில்லா மிருக வதை" இப்படி தான் ஜல்லிக்கட்டு எனக்கு அறிமுகம் ஆச்சு...அதனால தான் அடியோட வெறுத்தேன்.

இருந்தாலும், "ஜல்லிக்கட்டு" இத சுத்தி ஏன் இவ்வளவு பிரச்சனைகள் நடக்குது னு தெரிஞ்சிக்கலாம் சொல்லி நம்ம "கூகுல்" வாத்தியார் கிட்ட கேட்டா சும்மா எல்லா விஷயத்தையும் புட்டு புட்டு வெச்சிட்டாரு.... அப்றமா தான் தெரிஞ்சது இந்த விளையாட்டுக்கு பின்னாடி இருக்குற அறிவியலும் அத தடுக்க நடக்குற பெருநிறுவன அரசியலும்...( Corporate Politics).

நான் ஜல்லிக்கட்ட வெறுத்ததுக்கு "பீட்டா" காரணமானு தெரியாது ஆனா இப்ப நான் ஜல்லிக்கட்ட நேசிக்க முழு காரணமும் "பீட்டா" மட்டும் தான்...இப்ப புரிஞ்சிருக்கும் நான் ஏன் இந்த தலைப்பு வச்சேன்னு

நான் தெரிஞ்சிகிட்ட விஷயத்த எழுதுறேன்...நீங்களும் படிச்சி தெரிஞ்சிகங்க...

ஜல்லிக்கட்டு

நாம நம்மோட அடையாளங்களையும் பாரம்பரியத்தையும் கொஞ்சம் கொஞ்சமா இழந்துட்டு இருக்கோம் இது தான் நிஜம்...அதுல நம்ம கிட்ட மிச்சம் இருக்குற ஒரே பாரம்பரிய விளையாட்டு "ஜல்லிக்கட்டு"...

நம்மில் பலர் நினைக்கிற மாதிரி இது முண்ணூறு நானூறு வருஷம் முன்னாடி வந்த பழக்கம் இல்ல சுமார் 2000 வருஷம் முன்னாடில இருந்தே தமிழனோட இருக்குற பாரம்பரியம்...சிந்து வெளி சமயத்துல கூட ஜல்லிக்கட்டு நடந்த ஆதாரங்கள் இருக்கு...

சங்க கால நூலான கலித்தொகை ல கூட ஜல்லிக்கட்டு பத்தி சொல்லிருக்காங்க அதோட பொருள் இது தான் "காளை மாட்ட அணையும் ஒரு வீரன தான் சங்க கால பெண் தன்னோட துணையா தேர்ந்தெடுப்பா...காளைய அணைய பயந்த ஒருத்தன எத்தனை பிறவி எடுத்தாலும் கல்யாணம் செய்ய மாட்டாள்" னு இருக்கு...

ஜல்லிக்கட்டுக்கு நம்ம முன்னோர்கள் எவ்ளோ முக்கியத்துவம் கொடுத்து இருக்காங்கனு இதுல இருந்து தெரிஞ்சிகலாம்.

பெயர் காரணம்.

"சல்லி" அப்படினா காளையோட கழுத்துல போடுற வளையம் னு அர்த்தம்.

இப்ப கூட சில ஊர்கள் ல புளியங்கொம்புல வளையம் செஞ்சி மாட்டி விடுறாங்க.

"சல்லிக்கட்டு" இதுதான் காலப்போக்குல "ஜல்லிக்கட்டு" னு ஆச்சு...இந்த பெயர் வர இன்னொரு காரணம் சல்லிக்காச முடிஞ்சி காளையோட கொம்புல கட்டி விடுவாங்க அந்த மாட்ட அணையிற வீரனுக்கு அந்த பண முடிப்பு சொந்தம்...

இதுக்கு "ஏறு தழுவல்" னு இன்னொரு பெயரும் இருக்கு... அதாவது காளை மாட்டோட திமில தழுவி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை போறது... இவ்ளோ தான் மேட்டர் ஓவர்...

இதுல சில "அதி மேதாவி அரவேக்காடு"ங்க சொல்ற மிருக வதை எங்க இருக்குனு எனக்கு தெரியல...அதையும் அவங்க கிட்ட தான் கேக்கனும்...

ஸ்பெயின் நாட்ல காளை மாட்ட கொல்றதயே ஒரு போட்டியா வெச்சிருக்கான். இத இந்த அதிமேதாவிங்க எதுல சேர்பாங்க னு தெரியல...

ஜல்லிக்கட்டு எதிர்ப்பு ஏன்?.

ஜல்லிக்கட்ட ஒழிச்சுட்டா காளை மாடு வெட்டுக்கு போகும்...அப்படி போச்சுனா நாட்டு மாடு  இன விருத்தி செய்ய செயற்கை கருவூட்டல் ஊசிய தான் நாடனும் அது பெரு நிறுவனங்கள் ட தான் இருக்கு...
இது மூலமா வரும் மாடுகள் முற்றிலும் நம்ம ஆரோக்கியத்துக்கு தீங்கானவை.

ஜல்லிக்கட்டின் அவசியம்.

நாட்டு மாடுகள் அழியாம பாதுகாக்க ஒரே வழி ஜல்லிக்கட்ட அழியாம பாதுகாக்குறது மட்டும் தான்.
இந்த காளைகள் மூலமா விருத்தி ஆகுற மாடுகள் சக்தி உள்ளதாகவும் நமக்கு ஆரோக்கியம் தரக்கூடிய A2 பால் தரக்கூடிய பசுமாடுகளாகவும் இருக்கும்.

நம்ம இந்தியா மட்டும் 33 வகையான நாட்டு மாடுகள் இருக்கு...அதுல #கிருஷ்ணாவாலி, #புங்கனூர்_மாடு ,#வச்சூர் இன மாடுகள் இப்போ சில நூறு தான் இருக்கு...

அதுலயும் தமிழ்நாட்டு மாடுகளான "உம்பளச்சேரி" (தஞ்சை)."புங்கனூர்"(திருச்சி) மாடு்களை UNO அருகி வரும் பட்டியல்(Rare Species) ல சேத்துருக்கு...

ஆலம்பாடி இனம் அழிஞ்சு போச்சுனு நம்மல்ல எத்தனை பேருக்கு தெரியும்...

விவசாயம் செழிக்க நாட்டு மாடுகள் அவசியம்...அதோட கழிவுகள் கூட பூமிக்கு உரம்.அதோட இனவிருத்திக்கு நாட்டு காளைகள் ரொம்ப முக்கியம்...அதுக்கு ஜல்லிக்கட்டு தான் தீர்வு...

ஏற்கனவே "பசுமை புரட்சி" னு சொல்லி நம்ம பாரம்பரிய விதைகளை எல்லாம் இழந்து நிலத்துல ரசாயன நஞ்ச தெளிச்சு மண்ண மலடாக்கியாச்சு...
இப்ப இதுவும் நம்ம கைவிட்டு போச்சுனா நம்ம சந்ததிகளுக்கு ஆரோக்யமான வாழ்க்கை வெறும் கனவாக மாறிடும்...

நம்ம சந்ததிக்கு காசு பணம் சேத்து வைக்காட்டியும் பரவாயில்ல நோயில்லா வாழ்க்கை முறையவாது சொல்லிக் கொடுப்போம்...குறைஞ்ச பட்சம் நம்மல சபிக்காம இருப்பாங்க.

A1 பால் A2 பால் ஒரு பார்வை:

நாம எல்லோரும் இப்போ குடிக்கிறது பண்றிப்பால் தான். அதிர்ச்சியா இருந்தாலும் அது தான் நிஜம்.
A1 ரக பால் தான் சர்க்கரை நோய்க்கு மூல காரணம்.
இன்னொரு அதிர்ச்சியான விஷயம் நீரிழிவு நோய்கான மருந்த தயாரிக்கிறதும் இதே ஆளுங்க தான்...

சுருக்கமா சொன்னா இதுவும் பிராய்லர் கோழியும் ஒன்னு தான்.

ஆனா நம்ம நாட்டு மாடு A2 ரக பால் தரும் இந்த பால் தான் நம்ம உடலுக்கும் மனசுக்கும் ஆரோக்கியம் தரக்கூடியது...

"சம்சாரி வாழ்க்கைக்கு ஒரு மாடு" னு நம்ம முன்னோர்கள் சரியா தான் சொல்லிருக்காங்க.

நம்ம நாட்டு மாடுகளிடம் இவ்ளோ நன்மை இருக்கு...அத நாம தெரியாம இருக்க போய் தான் நம்ம காங்கேயம் காளை மாடுகளை இஸ்ரேல் பிரேசில் அமெரிக்கா போன்ற நாடுகள் இறக்குமதி செஞ்சி அவங்க நாட்டு மாடுகள் எண்ணிக்கையை பெருக்குறாங்க...ஆனா நமக்கு பண்றிப்பால் தான் தாராங்க அதான் நாம இப்ப குடிக்கிற பாக்கெட் பால சொன்னேன்...
கொக்கோ கோலா நிறுவனம் சமீபத்துல புதுசா பால் அறிமுகப்படுத்தி இருக்காங்க...எல்லாம் அந்த A1 ரக பால் தான்...

அழகான கண்ணாடிக் குடுவையில் இருப்பதனால் திராவகம் என்றும் தேன் ஆகாது....

ஜல்லிக்கட்ட ஒழிச்சா நாட்டு மாடு எண்ணிக்கை குறையும் அப்படி நடந்தா பெரு நிறுவனங்கள் தங்களோட A1 ரக பால இந்திய சந்தை ல நிரந்தரமா நிலை நிறுத்த முடியும்...அதுக்கான தரகு வேலைய தான் PETA, AWBI,BLUE CROSS, PFA போன்ற அமைப்புகள் செஞ்சிட்டு இருக்காங்க...

ஒரு இனத்த அழிக்கனும்னா அவங்களோட பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் அழிச்சா போதும்...அந்த இனம் தானா அழிஞ்சிரும்...இதை தான் இந்த பெரு நிறுவனங்களும் அவங்க கைக்கூலிகளும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அவ்ளோதாங்க....இத படிச்சி ஒருத்தர் விழிப்புணர்வு அடைஞ்சா கூட அதையே என் எழுத்துக்கு கிடைச்ச வெற்றியா கருதுறேன்.

என் நன்றிக்கு உரியவர்கள்:

ஜல்லிக்கட்டு பற்றி  என் நெஞ்சில்

விதை தூவிய மதிப்பிற்குரிய ஐயா #Senapathy அவர்கள்

விருட்சமாய் வளரச் செய்த. அண்ணன் #HipHopTamizhanAadhi

தனது விழிப்புணர்வு பாடலால் விவேகம் கொடுத்த அண்ணன் #ArunaRajaKamaraj அவர்கள்

கவிதைகள் மட்டுமே எழுதி கொண்டு இருந்த என்னை என் பாரம்பரிய விளையாட்டை பற்றி அறிய வைத்து அதை பற்றி ஒரு கட்டுரையும் எழுத வைத்து என்னை ஒரு சமூக பொறுப்பு மிக்க இளைஞனாய் மாற்றியதற்க்கு...
          #கோடான_கோடி_நன்றி_பீட்டா

இப்படிக்கு,

மாணவன்
இளைஞன்
என்றும் தமிழன்...

வாவு முஹம்மத். S.

நான் "தமிழன்" என்பதில்

"திமில்" அளவு

"திமிர்"எனக்கு...

Facebook - https://www.facebook.com/myscribblings/


EmoticonEmoticon

Drop categories